அக்டோபர் 06

கவிஞர் புலமைப்பித்தன் பிறந்த தினம்:

ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் புலமைப்பித்தன், 1935ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி கோயமுத்தூரில் பிறந்தார். 1964-இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தான் எழுதிய பாடல்கள் மூலம் மக்களின் மனம்கவர்ந்த இவர், தமிழக முன்னாள் முதல்வர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தார். தமிழக சட்ட மேலவையின் துணைத் தலைவராகவும், அதிமுக அவைத்தலைவராகவும் பதவி வகித்தார். எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் "அரசவைக் கவிஞராகவும்" நியமிக்கப்பட்டார். 2001இல் தமிழக அரசின் பெரியார் விருதை பெற்ற சிறப்பு மிக்கவர். 

No comments:

Post a Comment