இயற்கையின் கொடை

இயற்கையின் படைப்பில் அனைத்தும் அதிசயம் தான்.  அதிலும் இயற்கையால் படைக்கப்பட்ட மரம், செடி, கொடி, என அனைத்தும் மருத்துவ குணங்களையும், மூலிகை தன்மையையும் கொண்டுள்ளது நம்ப முடியாத ஒன்றாகும். ஆனால் சமீப காலமாக நாம் ஆங்கில மருத்துவத்தை முழுவதுமாக சார்ந்து இருக்க பழகிக்கொண்டோம். சிறு தலைவலிக்கும் ஒரு மாத்திரையை வாங்கி உண்டு நிவாரணம் தேடிக்கொள்கின்றோம். அல்லது மருத்துவர்களை அணுகுகின்றோம். இதனால் நமக்கு இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்ளும் அவசியம் ஏற்படுவதில்லை. அதற்கான பொறுமையும் நேரமும் கூட நம்மிடம் இல்லை. இதன் தாக்கம், சிலருக்கு காலப்போக்கில் ஆங்கில மருத்துவத்தால் பக்கவிளைவுகள் வரும்போதுதான் தெரியக்கூடும்.

ஆனால் நாம் சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களிலேயே நமது உடல் உபாதைகளுக்கான மருத்துவம் அடங்கி இருக்கும். ஆனால் அதுகுறித்து சரியாக தெரியாமல் நாம் ஆங்கில மருத்துவத்தை நாடியிருப்போம். இதனால் பண விரயமும் ஏற்பட்டிருக்கும். இயற்கை மருத்துவம் எந்தவித பக்கவிளைவுகளை ஏற்படுத்தாதது மட்டுமல்லாமல் பணமும் கொடுத்தால் செலவு ஆகாது.

ஒவ்வொரு தாவரத்தின் பல்வேறு பாகங்களுக்கும் பல மருத்துவ குணங்கள் உண்டு. பண்டைய காலங்களில் இவற்றை பயன்படுத்திதான் மருத்துவம் பார்த்து வந்தனர் . அவர்களின் ஆயுள்காலமும் கெட்டியாக இருந்தது . நாமும் இனி மருத்துவ குணமுள்ள  தாவரங்களைப் பற்றி தெரிந்து கொண்டு, முடிந்தவரை இயற்கையை நாடி நீண்ட ஆயுள் பெறுவோம்.

மஞ்சள் மருதாணி தக்காளி  நிலக்கடலை
எலுமிச்சை முள்ளங்கி நார்த்தங்காய்  ஆவாரம்பூ
கல் உப்பு இஞ்சி  பனைமரம்  மிஸ்வாக்
மிளகு நெல்லிக்காய்

No comments:

Post a Comment