'உப்பில்லாத பண்டம் குப்பையிலே' எனக் கூறுவர். இந்த ஒரு வாக்கியத்தை வைத்தே உப்பின் அருமையை நாம் தெரிந்துகொள்ளலாம்.
தற்காலத்தில் நாம் அதிகமாக தூள் உப்பையே பயன்படுத்துகிறோம். ஆனால், தூள் உப்பை வெண்மை நிறத்தில் கொண்டுவர பலபடியான முறையில் சுத்திகரிக்கின்றனர். இதனால் பொதுவாக கல் உப்பில் உள்ள 80-க்கும் மேற்பட்ட தாதுக்களின் வீரியம், தூள் உப்பில் குறைந்தே காணப்படும்.
கல் உப்பின் பயன்கள் :
- உடலின் pH மதிப்பை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது.
- செரிமான பிரச்சனைகள் வராமல் தடுத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.
- வாதம், வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணம் தருகிறது.
உப்பினால் நமக்கு எத்தனை பயன்கள்...! ஆனால் அதற்காக, உப்பினை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள கூடாது. ஒரு டீஸ்பூன் அளவு உப்பை மட்டுமே, ஒருவர் தினமும் அதிகபட்சமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது உணவியலாளர்களின் கருத்து. இதை மனதில் வைத்துக்கொண்டு அளவாக பயன்படுத்தி, நலமாக வாழ்க. !
No comments:
Post a Comment