எப்போதுமே மலிவான விலையில் கிடைக்கும். ஆனால் அதிக அளவில் தாதுக்களையும் வைட்டமின்களையும் கொண்டு, பல்வேறு நன்மைகளையும் அளிக்கும் அருமருந்தாய் விளங்குவதுதான் முள்ளங்கி. 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்பது போல, விலையோ மலிவு தான். ஆனால் அதன் பயன்களோ எண்ணற்றது.
- தினமும் முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதால், இதயத்தசைகள் பலம் பெறுவதோடு, இதயம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது.
- உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்து, செரிமான கோளாறுகளைத் தடுக்கிறது.
- மூல நோய்க்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
- தோல் சம்பந்தமான நோய்கள் வராமல் காக்கிறது.
- வெண்குஷ்டம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் தினமும் முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொள்ளவதால், உடல் முழுவதும் நோய் பரவாமல் தடுக்கலாம்.
- சுவாச பிரச்சனைகளுக்கு நன்மருந்தாக விளங்கும் முள்ளங்கி, காய்ச்சலையும் ஓட விரட்டும் தன்மையை பெற்றுள்ளது.
- உடல் பருமன் பிரச்சனையால் அவதிக்குள்ளானவர்கள், தினமும் முள்ளங்கி சாற்றை குடிப்பதால், எளிதாக உடல் எடையை குறைக்கலாம்.
- மஞ்சள்காமாலையின் தீவிரத்தை குறைக்கவும் முள்ளங்கி பயன்படுத்தப்படுகிறது.
- அனைத்திற்கும் மேலாக, இன்று பலர் சிறுநீரகக்கற்களை நீக்க லட்சக்கணக்கில் செலவு செய்தும் பலனில்லாமல் தவிக்கின்றனர். முள்ளங்கி சாற்றை தினமும் இருவேளைகள் எடுத்துக்கொள்வதால், சிறுநீரகக்கற்கள் எளிதாக கரைந்துவிடும்.
எத்தனை எத்தனை பயன்கள் முள்ளங்கியில்..!
இனி மறக்காமல் உணவில் சேர்த்துக்கொண்டு நலம்பெறுவோமே...!
இனி மறக்காமல் உணவில் சேர்த்துக்கொண்டு நலம்பெறுவோமே...!
No comments:
Post a Comment