இந்தியர்களின் அன்றாட உணவில் இன்றியமையாமல் இடம்பெறுவது இஞ்சி.. வாசனை, சுவை இந்த இரண்டு காரணங்களைத் தவிர பலர் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வதற்கான முக்கிய காரணம், அதன் மருத்துவப் பயன்கள் தான். அப்படி என்னதான் இந்த இஞ்சியில் உள்ளது 🤔🤔.. தெரிந்துகொள்வோமா.. !
தரைக்கீழ் தண்டு தாவரவகையை சார்ந்த வகையைச் சார்ந்ததுதான் இஞ்சி. வைட்டமின் A, C, B6, B12, கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து என அனைத்துவிதமான சத்துக்களையும் தன்னுள்ளே கொண்டுள்ள இஞ்சியில் ஆன்டி -ஆக்சிடன்ட்ஸ் கூட அதிகம்.
இத்தகைய காரணங்களால் உடலுக்கு பின்வரும் நன்மைகளை அளிக்கிறது.
தரைக்கீழ் தண்டு தாவரவகையை சார்ந்த வகையைச் சார்ந்ததுதான் இஞ்சி. வைட்டமின் A, C, B6, B12, கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து என அனைத்துவிதமான சத்துக்களையும் தன்னுள்ளே கொண்டுள்ள இஞ்சியில் ஆன்டி -ஆக்சிடன்ட்ஸ் கூட அதிகம்.
இத்தகைய காரணங்களால் உடலுக்கு பின்வரும் நன்மைகளை அளிக்கிறது.
- புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
- இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து, நீரிழிவு நோயாளிகளை காக்கிறது.
- இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, சீராகவும் வைக்கிறது.
- குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கு இஞ்சி சிறந்த மருந்தாக இருப்பதோடு, பசியுணர்வை தூண்டுகிறது.
- தினமும் இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்வதால் செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி, செரிமான கோளாறுகளில் இருந்தும் பாதுகாக்கிறது.
- நாள்பட்ட சளி, இருமல் போன்ற உபாதைகளுக்கு சிறந்த நிவாரணமாக இஞ்சி சாறு விளங்குகிறது.
- இஞ்சியை அரைத்து நெற்றியில் தடவுவதன், மூலம் நாள்பட்ட ஒற்றைத் தலைவலி நீங்கும்.
- நீரில் இஞ்சியை தட்டிப்போட்டு கொதிக்கவைத்து வாய்கொப்பளிப்பதன் மூலம், பல்வலி குணமாவதோடு, வாய் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.
- சோர்வை நீக்குவதில் இஞ்சியை மிஞ்சிய மருத்துவம் கிடையாது.
என்ன நண்பர்களே, இஞ்சியின் நன்மைகளை தெரிந்து கொண்டீர்களா.. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல, இஞ்சியையும் அளவோடு தான் பயன்படுத்த வேண்டும்.
ஒரு நபர், ஒரு நாளைக்கு, 4 கிராமுக்கு மேல் எடுத்துக்கொள்ள கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை. அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணிப் பெண்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள், பித்தப்பையில் கல் உள்ளவர்கள், இதயநோய் உள்ளவர்கள், அல்சர் இருப்பவர்கள், ஆகியோர் இஞ்சியை ஒதுக்கி வைப்பது நல்லது.
மேற்கண்ட அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டு, அளவோடு இஞ்சியை பயன்படுத்தி நலம் பெறுவோம்.. !
No comments:
Post a Comment