ஊறுகாய் வகைகளில் நார்த்தங்காய் ஊறுகாய் என ஒரு வகையை நாம் கேள்விப்பட்டிருப்போம். பொதுவாக ஊறுகாய் உடலுக்கு கேடு என்பவர்கள் கூட நார்த்தங்காய் ஊறுகாயை பரிந்துரைப்பார்கள். ஏனென்றால் உடலுக்கு சிறிதும் தீங்குவிளைவிக்காத காய் தான் நார்த்தங்காய். ஊறுகாயாய் பயன்படுத்தப் படுவதைத் தவிர மேலும் பலவழிகளில் நன்மைகள் பயக்கிறது நார்த்தங்காய்.
எலுமிச்சை வகையைச் சார்ந்த நார்த்தங்காய், வைட்டமின் B, அமினோ அமிலம், கொழுப்பு அமிலம், அலனைன், நியாசின், என அதிகமான வேதிப்பொருட்களை கொண்டுள்ளது. இவை அனைத்துமே உடலுக்கு நன்மைகள் தரக்கூடியனவே. அப்படி என்னென்ன நன்மைகள் ...!
- வாதம், பித்தம் உள்ளவர்கள், தினமும் இதை உணவில் சேர்த்துக்கொண்டால் விரைவான தீர்வை அளிக்கும்.
- கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் குமட்டல், வாந்தி போன்ற உபாதைகளுக்கு சிறந்த நிவாரணமாக விளங்கும்.
- நார்த்தம்பழம் சாறு உடல் சூட்டைக் குறைப்பதுடன், உடலுக்கு புத்துணர்வையும் அளிக்கும்.
- வெந்நீருடன் நார்த்தம்பழம் சாற்றாய் சேர்த்து அருந்தினால் , உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும்.
- வயிற்று புண் உள்ளவர்களுக்கு நார்த்தங்காய் ஊறுகாய், நல்ல மருந்தாக அமைவதுடன், வயிற்றில் புழுக்களையும் அழித்து, வாயு பிரச்சனையையும் தீர்க்கும்.
- சிறுநீரக கற்கள் போன்ற மோசமான நோய்களுக்கும் எளிய மருந்தாக விளங்கும்.
- அன்றாட உணவில் நார்த்தங்காயினை தவறாமல் சேர்த்துக்கொள்வதால் உடல் வலுப்பெறும்.
நன்றி ..!
No comments:
Post a Comment