தக்காளி

இந்திய உணவுமுறையில் தவிர்க்கமுடியாத இடம் பெற்றிருக்கும் தக்காளி,  ஆரம்பகாலத்தில் அலங்காரச் செடியாக வளர்க்கப்பட்ட ஒன்று.  பின்னர் தக்காளியின் பயனை அறிந்து மனிதர்கள் உணவில் சேர்த்துக்கொண்டார்.



தக்காளியில் ஆண்ட்டி -ஆக்ஸிடன்டுகள்,  வைட்டமின் A, வைட்டமின் C, குளோரின்,  பொட்டாசியம்,  மெக்னீசியம், பீட்டா கரோட்டின்,  போலிக் அமிலம்,  பைபர் மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியன உள்ளன.  இதனால் நாம்  அடையும் நன்மைகள் ஏராளம். 

தக்காளியை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளுவதால் 

  • சீரான இதயத்துடிப்பு 
  • இன்சுலின் மற்றும் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்தல் 
  • தைராய்டு சுரப்பியை சீராக்குதல் 
  • இரத்தநாளங்களில் அடைப்பு ஏற்படுவதை தடுத்தல்
  • தோல் சம்பந்தமான வியாதிகளிலிருந்து காத்தல்
  • சரும புற்றுநோயிலிருந்து காத்தல் 
  • உணவு செரிமானங்களை சீராக்குதல் 
  • சிறுநீரகம் தொடர்பான நோய்களிலிருந்து காத்தல் 
  • எலும்புகளை உறுதிப்படுத்துதல் 
ஆகிய நன்மைகளை நாம் அடைய முடியும்.  

எவ்வளவு ஆச்சர்யம்..! எத்தனை பயன்கள்.. ! இனி தினசரி உணவில் கட்டாயம் தக்காளியை சேர்த்துப் பயன் பெறுவோம்..  



No comments:

Post a Comment