"ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ" என கூறி கேள்விப்பட்டிருப்போம். அத்தகைய, அற்புத பயன்கள் பல அளிக்கும் ஆவாரம்பூவை, மஞ்சள் நிறத்தில் அழகிய பூக்களாக கிராமங்களில் அதிகம் கண்டிருப்போம். ஆனால் அதன் மருத்துவப்பயன்களை நாம் தெரிந்துகொள்ளாத காரணத்தால், எளிதாக கடந்து வந்திருப்போம். உண்மையில் ஆவாரம்பூவின் பயன்கள் அளப்பரியது. அவை என்னவென்று தெரிந்து கொள்வோமா..!
- செம்பருத்திப்பூவுடன் ஆவாரம்பூவை தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்து, தலையில் தடவி குளித்து வந்தால், முடி கொட்டுவது நிற்பதோடு முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்; பளபளப்பாகவும் இருக்கும்.
- பச்சைபயறுடன் ஆவாரம்பூவை சேர்த்து அரைத்து, உடலில் தேய்த்து குளித்து வந்தால், தோல் சம்பந்தமான பிரச்சனைகளையும், தோல் வறட்சியையும் நீக்கும்.
- உடல் சூட்டைத் தணிக்கும்.
- சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதுடன், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்.
- சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்க நன்மருந்தாக விளங்குவதுடன், இரத்தத்தில் யூரியாவின் அளவையும் குறைக்கும்.
நன்றி ..!
No comments:
Post a Comment