நிலக்கடலை

வேர்க்கடலை, கடலைக்காய், மணிலாக்கடலை, மணிலாக்கொட்டை  என அந்தந்த வட்டார பேச்சுவழக்குகளில் அழைக்கப்படும் நிலக்கடலையின் பூர்விகம் மத்திய அமெரிக்கா என்றாலும் பதினாறாம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் பரவியது. இவை கொட்டை (Nut) வகையை சேர்ந்தது என்பதால், இந்தியா, சீனா, நைஜீரியா போன்ற  நாடுகள் எண்ணெய் வித்துக்காக அதிகம் உற்பத்தி செய்கின்றன.



ஃபோலிக் ஆசிட் சத்து, கார்போஹைட்ரேட்,  விட்டமின், கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மேங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகச் சத்து, நார்ச்சத்து, கரையும் கொழுப்பு, புரதம், ட்ரிப்டோபென், திரியோனின், ஐசோலூசின், லூசின், லைசின், குலுட்டாமிக் ஆசிட், கிளைசின்,  தண்ணீர்ச்சத்து என நிலக்கடலையில் இல்லாத சத்துக்களே இல்லை எனக்கூட கூறலாம். இதைத்தவிர  நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானாது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

நிலக்கடலையில் நன்மைகள் :
  • செரிமான தன்மையை கட்டுக்குள் வைக்கிறது. 
  • மார்புச்சளியினை நீக்குகிறது.
  • உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது.
  • அடிக்கடி நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால் இதயநோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
  • பித்தப்பையில் கல் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.
  • உடல் பருமனை குறைக்கிறது.
  • இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
  • கடலை எண்ணெய்யில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் புற்றுநோய்க்கு எதிராக செயலாற்றும் தன்மை உடையது.
நிலக்கடலையை வேகவைத்தோ வறுத்தோ சாப்பிடுவதால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் காணாமல் போகும். பச்சையாக சாப்பிட்டால் மட்டுமே, மேற்கூறிய அனைத்து சத்துக்களையும் தாதுக்களையும் பெற முடியும். 

நிலக்கடலையில் நன்மைகள் பற்றி தெரிந்து கொண்டோம். ஆனால் நிலக்கடலையை உண்பதால் சில நேரங்களில் ஒவ்வாமையை உண்டுபண்ணுகிறது.  இதற்கு காரணம் என்னவென்றால் மண்ணின் மூலம் தாவரங்களை தாக்கும் நச்சுக்  கிருமிகள் மற்றும் பூஞ்சணங்கள் ஆகும்.
ஆகையால் கடலை, மஞ்சள் நிறத்திலோ, சொத்தை / பூச்சி அரிப்பு போன்று தோற்றமோ கொண்டிருந்தால் அதை உட்கொள்ள வேண்டாம்.




No comments:

Post a Comment