மிளகு

தென்னிந்தியாவும் உணவு பழக்கவழக்கம் மிகவும் காரசாரமானது. சுவைக்காகவும் உணவின் மணத்திற்காகவும் அன்றாட உணவில் ஏறக்குறைய அனைத்து விதமான நறுமண பொருள்களையும் பயன்படுத்துகிறோம். அதில் தவிர்க்க முடியாத முக்கிய பொருளாக உள்ளது மிளகு. என்னதான் தினமும் உணவில் சேர்க்கும் பொருளாயினும் பலருக்கு அதிலுள்ள நற்குணங்கள் தெரிவதில்லை. அப்படி என்னென்ன நற்குணங்கள் மிளகில் உள்ளன தெரிந்து கொள்ளவோமா?  


'பத்து மிளகு இருந்தா பகைவன் வீட்டிலயும் சாப்பிடலாம்' என்று கூறுவர். மிளகில் வைட்டமின் ஏ, சி, கரோடின்கள் மற்றும் பிற சத்துக்கள் உள்ளதால் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாப்பதுடன் விஷத்தையும் முறிக்கிறது. நாக்கின் சுவை அரும்புகளை தூண்டி விட்டு, ஐட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கச் செய்து, செரிமானத்தை தூண்டுகிறது. இதனால் அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அமிலச்சுரப்பு போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகள் தடுக்கப்படுகின்றன. 

மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் உள்ள புற்றுநோய் ஆய்வு மைய  ஆய்வின்படி, மார்பகப் புற்றுநோய் மற்றும் பிற புற்றுநோய் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பதில் மிளகு முக்கியபங்காற்றுகிறது. மேலும் மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

 


இத்தனை நன்மைகள் கொண்ட மிளகு கர்ப்பகாலத்திலும் பெண்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம். கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்துவதிலும் வீக்கம், வாயு மற்றும் பிடிப்புகள் போன்ற சிக்கல்களிலிருந்து நிவாரணம் அளிப்பதிலும் மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக கருவில் இருக்கும் குழந்தைக்கு நரம்புக்குழாய் குறைபாட்டை தடுக்க மருத்துவரால் ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம் கொண்ட மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். கர்ப்பத்துக்கு முன்பும் கருவுற்ற பிறகும் ஃபோலிக் அமிலம் தேவை. இது குழந்தைக்கு நரம்புக்குழாய் குறைபாட்டை தடுக்க செய்கிறது. ஆனால் இயற்கையாகவே அனைத்து வகையான மிளகுகளிலும் ஃபோலிக் அமிலச் சத்து உள்ளது. 

என்ன நண்பர்களே மிளகின் நன்மைகளையும் பயன்களையும் தெரிந்து கொண்டீர்களா?? அப்படியென்றால் இனி தினமும் மிளகாய் உணவில் சேர்த்துக்கொள்வீர்கள் தானே..!

நன்றி..!


No comments:

Post a Comment