நிறைய காய் கனிகளை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என அனைத்துவிதமான மருத்துவர்களும் பொதுவாக பரிந்துரைப்பது உண்டு. ஆனால் அவற்றுள் சிலவகை மட்டுமே அனைத்துவிதமான சூழ்நிலையிலும் உட்கொள்ளத் தகுந்தனவாக இருக்கும். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று, வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், கார்போஹைட்ரேட் போன்ற அதிக சத்துக்களை உள்ளடக்கிய நெல்லிக்காய். நெல்லிக்காய் உண்பதால் சளி பிடிக்கும் என பலர் அதனை ஒதுக்கி விடுவர். அதில் ஒருவர் நீங்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான்.
- நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள் உடலில் இரத்த ஓட்டத்தை தூண்டுவதால், இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருந்தால், அவற்றை சரிசெய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் இதய தசைகளை வலிமையாக்குகிறது. அத்துடன் உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கிறது .
- நெல்லிக்காயில் உள்ள இரும்புச்சத்து புதிய இரத்த செல்கள் உருவாக்கி, மறைமுகமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பைத் தடுக்கிறது.
- நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட், கண்களின் ரெட்டினாவை பாதுகாத்து கண்பார்வையை மேம்படுவதோடு, கண்களில் இருந்து தண்ணீர் வருவது, கண் எரிச்சல், கண்கள் சிவப்பது போன்றவை தடுக்கிறது.
- நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி , உடல் எடை குறைப்பதுடன், சரும பாதுகாப்பிலும், முடி வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்து இளமைத் தன்மையை தக்கவைக்கிறது.
- அல்சர் உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் சாற்றை பருகி வந்தால், அல்சர் குணமாவதுடன், குடலியக்கம் சீராகி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.
- நெல்லிக்காய் சாற்றை தொடர்ந்து பருகிவந்தால் உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. இதனால் நீரிழிவு நோய் நம்மை அண்டாது .
- நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடைப்படுத்தி, புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். இது ஆய்விலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இத்தனை நன்மைகள் கொண்ட நெல்லிக்காய் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு உகந்தது என்பது கூடுதல் சிறப்பு. என்ன நண்பர்களே..! இனி தினமும் நெல்லிக்காயை உண்போம்தானே..!
No comments:
Post a Comment