பனைமரம்

ஒவ்வொரு தாவரங்களுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உண்டு. ஆனால் அந்த தாவரத்தின் ஏதேனும் ஒரு சில பாகங்கள் மட்டுமே மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்படும். ஆனால் பனைமரமோ சற்று வித்தியாசமானது. மரம் முழுவதுமே அவ்வளவு மருத்துவ குணங்களால் படைக்கப்பட்டிருக்கிறது. இந்த காரணத்தினாலேயே பனை மரத்தை ‘கற்பக விருட்சம்’ என நம் முன்னோர்கள் அழைத்தனர்.



உலகின் மூத்த மொழி ‘தமிழ்’. அதனை உலகிற்கு உணர்த்தியது என்னமோ பனைஓலைகள் தான். இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம். பனைமரம் தமிழரின் அடையாளம் என்பதை.

பனைமரத்தில் மொத்தம் 34 வகைகள் உள்ளன. 30 மீட்டர் வரை வளரக்கூடிய பனைமரத்தின் இலை அதாவது பனையோலை 2-3 மீட்டர் நீளம் வரை இருக்கும்.


மேக நோய் (Syphilis) மற்றும் கோடை வியர்குருக்கு தீர்வு, பதநீர்; சீதக்கழிச்சலுக்கு தீர்வு, நுங்கு; உயிர்சத்து குறைபாட்டிற்கு தீர்வு, பனம்பழம்; உடல் சூட்டுக்கு தீர்வு, பனங்கிழங்கு என பனையில் நாம் அவ்வளவு நன்மைகளைப் பெறலாம். அதுபோக பதநீரிலிருந்து பெறப்படும் மதிப்புக்கூட்டு பொருட்களான கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியன பல்வேறு சத்துக்களையும் மருத்துவகுணங்களையும் பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் விவசாயம், கைத்தறிக்கு பிறகு நாட்டின் வருமானத்திலும் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகின்றது.


அதிவேக நகரமயமாதலில் பனைமரம் சிறுக சிறுக காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. சில கிராமங்களிலும் ஊருக்கு ஒதுக்குப்புறங்களிலும் ஆங்காங்கே ஒற்றை பனைமரமாய் கேப்பாரற்று காணப்படுகிறது. நாம் இப்போது முயற்சி எடுத்தாலும், சரியான முறையில் தொடர்ந்து பயிரிட்டு பனைமரத்தின் இனத்தை அழியாமல் காக்கலாம். தமிழரின் தேசிய மரம், தமிழினத்தின் அடையாளம். அதை காப்பது நமது கடமையே..!

நன்றி..!


No comments:

Post a Comment