மனித உரிமைகள் தினம்:
கருத்துச் சுதந்திரம், எழுத்துரிமை, கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை அனைவரும் பெற்று சுதந்திரமாக உயிர் வாழ்வதற்கான உரிமை ஒவ்வொருக்கும் உண்டு; இனம், நிறம், நிறம், மொழி போன்ற பிற சமூக தோற்றத்தால் மனிதனுக்கு மனிதன் பாகுபாடு பார்க்கக்கூடாது என்பதை உணர்த்துவதற்காக ஆண்டுதோறும் டிசம்பர் 10 அன்று உலகம் முழுவதும் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குழு மனித உரிமை பிரகடனத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதன்படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகளை அடையாளம் கண்டு, அதனை சர்வதேச மனித உரிமைகளாக ஐநா சபையில் சமர்ப்பித்தது. 1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி ஐநா சபையில் 58 நாடுகள் இந்தப் பிரகடனத்துக்கு அங்கீகாரம் வழங்கின. இந்த நாள்தான் 1950ம் ஆண்டு முதல் சர்வதேச மனித உரிமைகள் தினமாக அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் (Universal Declaration of Human Rights - UDHR) என்பது 500க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கும் ஒரு சாசனம். இதுவே உலகில் மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஆவணமாகும்.
No comments:
Post a Comment