ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம்:
பிரிட்டிஷ் காலனி அரசு தேசபக்த புரட்சியாளர்களுக்கு எதிரான அடக்குமுறையை தீவிரப்படுத்த, 1919 மார்ச் மாதம் எந்தவித நீதிமன்ற விசாரணையுமின்றி எவரையும் சிறையில் அடைக்க அதிகாரமளித்த ரௌலட் சட்டம் இயற்றப்பட்டது. இதற்கெதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த நிலையில், 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13இல் அமிர்தசரஸ் நகரின் ஜாலியன் வாலாபாக் பகுதியில் நிராயுதபாணிகளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள்மீது அப்போதைய பஞ்சாபின் துணை நிலை ஆளுநர் மைக்கேல் ஓ டையர் மற்றும் ராணுவக் கமாண்டர் ஜெனரல் ரெஜினால்டு டைமர் ஆகியோர் தங்கள் அதிகாரங்களை பயன்படுத்தி, எந்திரத் துப்பாக்கிகளில் குண்டுகள் தீரும் வரை சுடுமாறு உத்தரவிட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியிருந்த மைதானத்திற்கு ஒரே ஒரு குறுகிய வாயில் மட்டுமே இருந்ததால் இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். இந்த படுகொலை பஞ்சாப் கொடுமை எனப்பட்டது.
No comments:
Post a Comment