செப்டம்பர் 18

உலக மூங்கில் தினம்:

பொதுவாக பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம், வனவாசிகளின் வாழ்வாதாரம் என்றெல்லாம் அழைக்கப்படும் மூங்கிலின் நன்மைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து அதன் பயன்பாடுகளை ஊக்குவிக்கவும், அதன் மூலம் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை பெருக்கவும்,   தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற 8 வது உலக மூங்கில் மாநாட்டில் 'உலக மூங்கில் தினம்' அறிவிக்கப்பட்டு அன்று முதல் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.   

உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்:


உலகம் முழுவதிலும் உள்ள நீர் வளங்களை பாதுகாப்பதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தி அவர்களிடம் ஈடுபாட்டை உருவாக்கவும், நீர்நிலைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனைக்குட்படுத்தி அதில் உள்ள அமில மற்றும் காரத்தன்மையை ஆராய்ந்து நீரின் தரம் குறையாமல் பாதுகாக்கவும் அமெரிக்காவின் Clean Water Foundation என்ற அமைப்பு 2003ஆம் ஆண்டு முதல்  செப்டம்பர் 18ஆம் தேதியை உலக தண்ணீர் கண்காணிப்பு தினமாக அறிவித்தது.


No comments:

Post a Comment