விளையும் பயிர் முளையிலே

#1) விளையும் பயிர் முளையிலே

ஒரு காலத்தில் புத்தகங்களே உலகம் என இருந்த மனிதர்களை மாற்றி, ஸ்மார்ட் போன்-களும் கையுமாக மாற்றியது காலம். அதிலும் கொடுமை ஒருவரிடம் இரண்டிற்கும் மேற்பட்ட போன்கள் இருப்பது. இந்த சூழ்நிலையில் பெரியவர்களாலேயே புத்தகங்களை வாசிக்க போதிய நேரத்தை ஒதுக்க முடியவில்லை. இதில் குழந்தைகளை எங்கிருந்து புத்தகங்களை வாசிக்க வைப்பது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

ஆனால் பெற்றோர் அனைவரும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளின் முதல் Role model-ஆக இருப்பது அவர்களின் பெற்றோர்கள் தான். இதை நீங்கள் எளிதாக அவர்களின் நடத்தையின் மூலம் அறியலாம். 

பெற்றோர் தங்களை மாற்றிக்கொண்டு தங்களது நேரத்தை புத்தகங்களுடனும் தனது குழந்தைகளுடனும் செலவிட்டால் குழந்தைகளுக்கும் இந்தப்பழக்கம் மிக எளிதாகத் தொற்றிக்கொள்ளும். இதனால், அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் அவர்கள் சிறந்துவிளங்க நீங்கள் வழிவகுக்குறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இன்று குற்றவாளிகளாக இருக்கும் பல இளைஞர்களின் வாழ்க்கையைத் திரும்பிப்பார்த்தால் அதற்கு காரணம் அவர்கள் வளர்ந்த சூழ்நிலையாகத்தான் இருக்கும். தங்களது குழந்தைகளின் வாழ்க்கை முழுக்க முழுக்க பெற்றோரின் நடவடிக்கைகளையும் அவர்கள் வளர்ந்த சூழ்நிலைகளும்தான் காரணமாக இருக்கும்.

இன்று உலக சிறுவர் புத்தக தினம் (02 April). இன்றிலிருந்து ஒரு நல்ல துவக்கத்தை தொடங்குங்கள். முடிந்த அளவு உங்களுடைய குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். பாடப்புத்தககங்களைத் தவிர கதைபுத்தகங்களையும் படிக்க ஊக்கமழியுங்கள். என்ன படிக்கிறார்கள் என அவர்களிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் படிக்கும் புத்தகங்களையும் அவர்களிடம் கொடுத்து படிக்க சொல்லுங்கள். இதனால் அவர்கள் கற்பனைத் திறனும் அறிவுக்கூர்மையும் வளர்ச்சியடையும். குழந்தைகள் தவறான பாதையில் செல்வதைத் தடுக்கும்.

அனைத்திற்கும் மேல் 'விளையும் பயிர் முளையிலே' என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

நன்றி ..!

No comments:

Post a Comment