தேசிய அறிவியல் நாள்
சர் சி.வி.ராமன் அவர்கள், 1921 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் நடந்த விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக பங்கேற்க, கப்பலில் பயணம் மேற்கொண்டிருந்த போது இயற்கையின் மீதிருந்த ஆர்வத்தில், மத்திய தரைக் கடல் பகுதியின் வானத்தை உற்றுநோக்கி கொண்டிருந்தார். தான் பார்த்த வானம் ஏன் அவ்வளவு நீல நிறத்துடன் உள்ளது என சிந்திக்க தொடங்கி அதன் தொடர்ச்சியாக பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு 'இராமன் விளைவு' என்ற கோட்பாட்டை 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியிட்டார்.
இந்த கண்டுபிடிப்பு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசை இந்தியாவிற்கு பெற்று தந்தது. தனது கோட்பாட்டை சர் சி.வி.ராமன் அவர்கள் வெளியிட்ட நாள், 1986 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தேசிய அறிவியல் நாளாக அனுசரிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment