உலக எழுத்தறிவு தினம் (International Literacy Day):
ஐக்கிய நாடுகள் அமைப்பின் யுனிஸ்கோ (UNESCO), எழுத்தறிவு இல்லாதவர்களின் உலகை உருவாக்க எண்ணி, ஒரு மாநாட்டினை 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி நடத்தியது. எழுத்தறிவுப் பெற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், உலக எழுத்தறிவின்மையை அகற்ற மேற்கொள்ளப்பட வேண்டியவை பற்றியும் அந்த மாநாட்டில்தான் முதன் முதலில் அறிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சமூகத்துக்கும், தனிப்பட்ட மக்களுக்கும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தைத் உணரவைப்பதை நோக்கமாக கொண்டு, 1966ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 8ஆம் தேதி உலக எழுத்தறிவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
கவிஞர் புலமைப்பித்தன் மறைந்த தினம்:
ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் புலமைப்பித்தன், 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி மண்ணுலகைவிட்டு மறைந்தார். 1935ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி பிறந்த இவர், 1964-இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்து, சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தான் எழுதிய பாடல்கள் மூலம் மக்களின் மனம்கவர்ந்த இவர், தமிழக முன்னாள் முதல்வர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தார். தமிழக சட்ட மேலவையின் துணைத் தலைவராகவும், அதிமுக அவைத்தலைவராகவும் பதவி வகித்தார். எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் "அரசவைக் கவிஞராகவும்" நியமிக்கப்பட்டார். 2001இல் தமிழக அரசின் பெரியார் விருதை பெற்ற சிறப்பு மிக்கவர்.
No comments:
Post a Comment