இராமலிங்க அடிகளார்


திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப்பெயர் பெற்ற இராமலிங்க அடிகளார் அவர்கள் பிறந்த ஊர் கடலூர் மாவட்டம் மருதூர். இவரின் பெற்றோர் இராமையா - சின்னம்மையார். இவரின் காலம்  05/10/1823 முதல் 30/01/1874 வரை.

ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகியன இவர் எழுதிய நூல்கள் ஆகும். இவரின் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
சமரச சன்மார்க்க நெறியை வழங்கி, அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை அமைத்தவர். வாடியப்பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர்; மக்களின் பசித்துயர் போக்கி உணவளிக்க அறச்சாலையையும் அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர்.
பசியால் வாடும் மக்களுக்கு உணவளிக்க வடலூர் சத்திய தருமசாலையில் இவர் அன்று மூடிய அடுப்பு இன்றும் அணையாமல் பசி என்னும் நோயைத் தீர்த்து வருகிறது.

No comments:

Post a Comment