நோட்டா என்றால் என்ன..?

ஓரளவிற்கு அனைவருக்கும் 'நோட்டா' என்ற ஒன்று தேர்தலில் இருப்பது தெரியும். ஆனால் நோட்டா என்றால் என்ன? நோட்டாவிற்கு வாக்களித்தால் என்ன மாதிரியான மாற்றம் ஏற்படும் என்பது தெரியுமா?



அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் 2013-ம் ஆண்டு முதல் இடம் பெற்ற இந்த நோட்டா, வேட்பாளர்கள் வரிசையின் இறுதியில் இடம் பெற்றிருக்கும்.

ஆங்கிலத்தில் NOTA என்பதன் விரிவாக்கம் None Of The Above என்பதாகும். அதாவது உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் உங்களுக்கு எவர்மீதும் நம்பிக்கை இல்லாதபட்சத்தில் நீங்கள் நோட்டாவிற்கு உங்கள் வாக்கினை செலுத்தலாம். 

ஆனால் இதனால் தேர்தல் முடிவில் மாற்றம் ஏற்படுமா என்றால் கண்டிப்பாக இல்லை. பின்னர் எதற்கு இந்த நோட்டா என்றால், நமது தேர்தல் ஆணையம் நம்மிடம் இருந்து 100% வாக்குகளை எதிர்பார்க்கிறது. 

'என்னுடைய வாக்கு யாருக்கும் இல்லை' என நினைத்து வாக்களிக்காமல், தனது அடிப்படை உரிமையை விட்டுக்கொடுக்கும் இந்திய குடிமக்களுக்காக, இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது தான் நோட்டா. உங்கள் வெறுப்பையும் நீங்கள் உங்கள் வாக்கின் மூலம் (உங்கள் உரிமையை விட்டுக்கொடுக்காமல்) தெரியப்படுத்தலாம் என்பதற்காகவே நோட்டா. 



நாளை தமிழகத்தில் தேர்தல் நாள். உங்கள் அடிப்படை உரிமையினை யாருக்காகவும் எதற்காகவும் விட்டு கொடுத்துவிட வேண்டாம் என்பதற்காகவே இந்த சிறப்பு பதிவு. 

நன்றி ..!


No comments:

Post a Comment