சரியான
திட்டமிடல், தொலைநோக்கு, புத்திகூர்மை உள்ளிட்ட திறன்கள் அனைத்தும் தேவைப்படும் விளையாட்டு என்பதால் அறிவாளிகளின் விளையாட்டு என கருதப்படும் சதுரங்க
விளையாட்டைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் இது உலகின் மிகப்
பழமையான விளையாட்டு என்பது உங்களுக்கு தெரியுமா..?
இந்தியாவில்
5-ம் நூற்றாண்டில் 'சதுரங்கம்' என்ற பெயரில் உருவான
இந்த விளையாட்டு, பின்னாட்களில் பெர்சியாவுக்கு அதாவது இன்றைய ஈரானுக்கு
பரவியது. பெர்சியாவை அரேபியர்கள் வெற்றிகொண்டபோது, சதுரங்கத்தை அறிந்துகொண்ட இஸ்லாமியர்கள், அதனை தென் ஐரோப்பாவுக்கு
எடுத்துச் சென்றனர். இப்படியாக அது உலகம் முழுவதும்
பரவியது.
பிரான்ஸ்
நாட்டில் பாரிஸ் நகரில் 1924-ஆம்
ஆண்டு ஜூலை 20-ல் நடைபெற்ற
8-வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின்போது சர்வதேச
சதுரங்க
கூட்டமைப்பு
(FIDE - International Chess Federation)தொடங்கப்பட்டது.
1966-ஆம் ஆண்டில், FIDE தொடங்கப்பட்ட அதே நாளில் சர்வதேச சதுரங்க
தினம்
முதன்முதலாக கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் பல்வேறு
போட்டிகளை நடத்திவரும் உலக சதுரங்க கூட்டமைப்பு,
மொத்தம் 185 உறுப்பினர்களை கொண்டு, இந்த தினத்தை
உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றது. இதில் சுவாரசியமான தகவல்
என்னவென்றால் உலகில் உள்ள பெரியவர்களில்
70% பேர், தம் வாழ்நாளில் ஏதோ
ஒரு காலகட்டத்திலாவது சதுரங்கம் விளையாடியுள்ளனர் என ஒரு கணக்கெடுப்பு
தெரிவிக்கிறது.
நவீன வடிவிலான முதல் சதுரங்க போட்டி
1851-ஆம் ஆண்டில் லண்டனில் தான்
நடந்தது. அதில் ஜெர்மனியரான அடால்ப்
ஆண்டர்சன் வெற்றி பெற்றார். இப்போது
நாம் பயன்படுத்தும் நவீன சதுரங்க பலகை,
ஐரோப்பாவில் 1090-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1125-ஆம் ஆண்டு முதல் மடிக்கும்
சதுரங்க பலகை கண்டுபிடிக்கப்பட்டது. கணினியில் சதுரங்கம்
விளையாடுவதற்கான நிரலை (Computer Program) ஆலன் டூரிங் என்பவர்
1951-ல் உருவாக்கினார்.
டாக்டர்
இம்மானுவேல் லஸ்கர் என்ற ஜெர்மானியர்
தொடர்ந்து 26 ஆண்டுகள் 337 நாட்களுக்கு வெற்றியாளராக தொடர்ந்துள்ளார்.
இவான் நிக்கோலிக், கோரன் ஆர்சோவிக் இடையே
செர்பியாவின் பெல்கிரேடு நகரில் 1989-ல் நடந்த போட்டிதான்,
நீண்ட நேரம் நடைபெற்ற போட்டியாகும்.
டிராவில் முடிந்த இப்போட்டி 269 நகர்த்தல்கள்
வரை நீடித்தது. மிகநீண்ட சதுரங்க விளையாட்டாகவும் இது
பதிவாகியுள்ளது.
இந்தியாவில்
சதுரங்க விளையாட்டு மிகவும் பிரபலமாக மாறியதற்கு
காரணம், இந்தியாவின் சதுரங்க மேதையும் முன்னாள்
உலக சாம்பியனுமான கிராண்ட்மாஸ்டர்
விஸ்வநாதன்
ஆனந்தின்
வெற்றிகள்தான். இருப்பினும் சதுரங்க விளையாட்டை பொறுத்தவரையில்
தொடர்ந்து பல வெற்றியாளர்களை உருவாக்கிவரும்
நாடாக ரஷ்யாவே ஆதிக்கம் செலுத்தி
வருகிறது.
உலகின்
மிக நீண்ட நேரம் நடந்த
சதுரங்க போட்டியில் 5949 நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டன. சதுரங்கம் விளையாட தொடங்குபவர்களுக்கு முதல்
ஆண்டில் ‘ரூக்கிஸ்’
என்று பெயர். 'செக்மேட்' என்ற
வார்த்தை 'ஷா மட்' என்ற
அரபு வார்த்தையிலிருந்து உருவானது. இதற்கு 'ராஜா இறந்துவிட்டார்'
என்று பொருள்.
மூளைக்கு
வேலை கொடுக்கும் விளையாட்டு 'சதுரங்கம்' என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் இரண்டே நகர்தல்களிலும் இந்த
விளையாட்டை முடிவுக்கு கொண்டுவந்து விடலாம். திறமையால் மட்டுமே சாதிக்கலாம் என்பதற்கு
இந்த விளையாட்டும் ஒரு உதாரணம்.
No comments:
Post a Comment