அடுத்து என்ன படிக்கலாம்..?



பன்னிரண்டாம் வகுத்து தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. பலர் அவர்களுக்கு என்ன துறை பிடிக்குமோ அந்த துறைகளில் மேற்படிப்பை தேர்வு செய்திருப்பீர்கள். ஆனால் சிலர் என்னும் குழப்பத்திலேயே இருப்பீர்கள். அவர்களுக்காக இந்த பதிவு.

Image result for அடுத்து என்ன படிக்கலாம்..?

மேற்படிப்பு என்றதும், மிக எளிதாக தங்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள கல்லூரியில் எந்த துறையில் இடம் காலியாக உள்ளது என தெரிந்துகொண்டு, அந்த துறையிலேயே மேற்படிப்பை தொடருவர் சிலர். மேலும்  சிலர் வேலைவாய்ப்பிருக்கு முக்கியத்துவம் கொடுத்து வளாக நேர்காணல்  (Campus Interview) இருக்கும் கல்லூரியில் சேருவர். ஆனால் மிகவும் குறைந்த நபர்களே தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து, தங்களுக்கு என்ன துறைவேண்டும் என தீர்மானிக்கின்றனர்.

நமது நாட்டில் தற்போது இருக்கும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு காரணம், அனைவரும் குறைந்தபட்சம் இளநிலை கல்லூரிப் படிப்பையாவது முடித்துவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் தேர்வு செய்த துறையில் போதிய அறிவைப் பெற்றிருப்பது இல்லை. தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதும் என நினைக்கின்றனரே தவிர, அதற்கான திறனை அவர்கள் வளர்த்துக்கொள்வது இல்லை. 

இவை எல்லாவற்றிற்கும்மேல், நடப்பில் என்ன படிப்பில் சேர்ந்தால் அதிகம் ஊதியம் கிடைக்கும் என நினைக்குறோமே தவிர எதிர்காலத்தில் அந்தபடிப்பிற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என யாரும் எண்ணிக்கூட பார்ப்பது இல்லை. இந்த மாதிரியான சிறுசிறு பிழைகள் படிப்பிற்கு பிறகு வேலைவாய்ப்பின்மையில் கொண்டுபோய் விடுகிறது. 

Image result for unique in career

மேற்படிப்பில் துறையை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு துறையை பற்றியும் ஒரு மேலோட்டமான புரிதலாவது இருக்க வேண்டும். நடப்பில் இருக்கும் நல்ல வாய்ப்புகளை விட எதிர்காலத்தில் அந்த துறைக்கான தேவை எப்படி இருக்கும் என சிந்தித்து தேர்தெடுக்க வேண்டும்.

பட்டபடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பது போலவே, அந்த துறைச் சார்ந்த ஏதேனும் சிறப்பு வகுப்புகளில் கலந்துகொண்டு திறனை வளர்ப்பதால், எளிதாக ஒரு தனித்துவதை பெற்று சிறந்த வேலைவாய்ப்பினை எதிர்காலத்தில் பெறமுடியும். காலத்தோடு ஒன்றி, காலத்திற்கு ஏற்றாற்போல் சிந்தித்து, புதுப்புது தொழில்நுட்பங்களை தெரிந்துவைத்துக் கொள்ளவதால் வேலைவாய்ப்பில் சிறந்த உயரத்தை அடையலாம்.

எப்போதுமே புதுமையை விரும்பும் உலகம் இது. ஆகையால் புதுமையாய் சிந்தித்து, நல்ல துறைகளை தேர்ந்தெடுத்து, வாழ்க்கையில் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

நன்றி ..!


No comments:

Post a Comment