கன்னியாகுமரி

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இயற்கை எழில் நிறைந்த மாவட்டம் தான் கன்னியாகுமரி. 1684 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டம் மக்கள்தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.



நாகர்கோவில் மாநகராட்சியையும்,  பத்மநாபபுரம், குளச்சல்,  குழித்துறை என மூன்று நகராட்சிகளையும் கொண்டுள்ள இந்த மாவட்டம்,  கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டிலேயே முதல் மாவட்டமாக உள்ளது. 

திருவள்ளுவர் சிலை,  விவேகானந்தர் நினைவு மண்டபம்,  சூரிய உதயம், முக்கடல் சங்கமம் என பல சிறப்பம்சங்களைக் கொண்டு சுற்றுலாப் பயணிகளை மிக எளிதாக கவர்கிறது குமரி கடற்கரை. 

காற்றாலைகளின் மூலமும்,  ரப்பர் உற்பத்தியின் மூலமும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்குகொள்ளும் மாவட்டமாக திகழ்கிறது குமரி மாவட்டம்.  

குழித்துறையாறு, வள்ளியாறு,  பழையாறு ஆகிய ஆறுகளையும்,  பேச்சிப்பாறை,  பெருஞ்சாணி,  முக்கடல்,  சிற்றாறு,  மாம்பழத்துறையாறு என பல அணைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த மாவட்டம் மருத்துவ மூலிகைகள் மற்றும் தாதுவளங்கள் நிறைந்த மலைகள் பலவற்றையும் உள்ளடக்கியுள்ளது.  




மொத்தத்தில் இயற்கை வளங்களின் மொத்த குவியலை தன்னகத்தே கொண்டுள்ள இந்த மாவட்டத்தை கண்டிப்பாக ஒருமுறையேனும் சென்று பார்த்துவாருங்கள்.  கண்டிப்பாக உங்கள் மனதில் ஒரு புத்துணர்ச்சி தோன்றும். 

நன்றி.. !

No comments:

Post a Comment