இந்த உலகம் அன்பாலும்
உறவுகளாலும் நிறைந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 29ஆம்
நாள் உலக தம்பதியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
பல தம்பதிகளின்
திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடத்திவைக்கப்பட்ட திருமணமாக இருக்கும்.
சில தம்பதிகள் காதல் திருமணம் செய்திருப்பார்கள்.
எப்படி இருந்தாலும்
திருமணத்தின் நோக்கம் என்னவோ ஒன்று தான்.
ஒரு சராசரி மனிதனால்
ஆயுள் முழுவதும் தனித்து வாழ இயலாது. பெற்றோருக்குப் பின் அன்பாக, ஆதரவாக, நம்பிக்கையாக,
இறுதிவரை இணை பிரியாத ஒரு சொந்தம் வேண்டும். மேலும் குடும்பம், கணவன்/மனைவி, மக்கள்
என மனித இனம் தழைக்க வேண்டும். மனிதனின் வாழ்வு
செழிக்க வேண்டும். இந்த காரணங்களாலேயே திருமணம் என்பது நமது சமூகத்தில் மிக முக்கியமான
ஒன்றாக உள்ளது.
திருமண பந்தத்தின் பொருள் புரிந்தே நம் சமூகத்தில் திருமணம் நடைபெறுகிறது
ஆனால் இதில் துரதிஷ்டவசமாக சில திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றது. உலக அரங்கில்
நம் நாட்டில் பதிவு செய்யப்படும் விவாகரத்து வழக்குகளின் விகிதம் மிகக் குறைவு என்றாலும்
சமீப காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வழக்குகளின் எண்ணிக்கை கூடி உள்ளது.
இதில்
மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால் சில தம்பதிகளின் பிரிவிற்கு காரணமாக அவர்களன்றி
அவர்களின் குடும்பமோ சமூகமோ காரணமாக இருக்கும். இது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நடத்திவைக்கப்பட்ட
திருமணத்திலும் காணப்பெறுவது கொடுமையிலும் கொடுமை.
தம்பதிகளே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்க படுவது என்பார்கள். தம்பதிகள் பரஸ்பரம் அன்பை
பரிமாறிக்கொள்ளுதல், விட்டுக்கொடுத்து செல்லுதல், அளவில்லா காதல் அன்பான குழந்தைகள்
என காலாகாலத்திற்கும் அந்த பந்தம் தொடர வேண்டும். ஒருவரை ஒருவர் மூன்றாம்
நபர் முன் விட்டு கொடுத்து பேசும் பழக்கத்தை கொள்ளாதீர்கள். மூன்றாம் நபர்களுக்காக
எப்போதும் தம்பதியினருக்குள் சண்டையும் பிரச்சனையும் வருவதை அனுமதிக்காதீர்கள். சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்பட்ட வாழ்க்கையை தாங்களாகவே நரகமாக்கி கொள்ளாதீர்கள்.
தம்பதியரின் ஒற்றுமைக்கு
எடுத்துக்காட்டாக உலகளவில் நமது நாட்டையே கூறுகிறார்கள். இந்த நம்பிக்கையையும் தம்பதிகள்
அவர்களது காதலையும் பொய்யாகவிட வேண்டாமே.
அனைத்து தம்பதியினருக்கும் உலக தம்பதியர்
தின வாழ்த்துக்கள்
நன்றி..!
No comments:
Post a Comment