மரச்செக்கு எண்ணெய்

சமீபத்தில் பரவலாக 'மரச்செக்கு எண்ணெய்' என்ற வார்த்தையை நாம் கேள்விப்படுகின்றோம். கடைக்காரரும்  'இது உடலுக்கு நல்லது' என நமக்கு பரிந்துரை செய்வதை பார்க்க முடிகிறது . ஆங்காங்கே கண்கவர் விளம்பரப்பலகைகளையும்  தொலைக்காட்சியில் விளம்பரங்களையும்  பார்க்க முடிகிறது. சிலர்  வாங்கியும் பயன்படுத்துகின்றனர் 

ஆனால் உண்மையில் மரச்செக்கு எண்ணெய் என்றால் என்ன? அதன் நன்மைகள் என்ன? எனத்  தெரிந்து வாங்கிப் பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவே.




மரச்செக்கு எண்ணெய் என்றால் என்ன? 
இயற்கையான முறையில் எண்ணெய் விதைகளை உலர வைத்து, மரச்செக்கில் விதைகளை ஆட்டி, பிழிந்து, வடிகட்டி பயன்பாட்டிற்கு வருவதே மரச்செக்கு எண்ணெய்.


  • இதில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் (Refined Oil) பயன்படுத்துவதைப்போல எந்தவொரு வேதிப்பொருட்களையும் சேர்ப்பது இல்லை.


  • அதுமட்டுமல்லாமல், எந்திரத்தின் மூலம் எண்ணெய் தயாரிப்பதில் எண்ணெய் விதைகள் அதிகளவில் வெப்பப்படுத்தப்படுவதால் அதன் சத்துக்கள் இழக்கப்படுகிறது. ஆனால் மரச்செக்கு முறையில் வெப்பம் உண்டாகாது. இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.


  • சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யில் வெளிர்நிறத்தை கொண்டுவர சல்பர் மற்றும் எண்ணெய்யின் பிசுபிசுப்பு தன்மையை குறைக்க காஸ்டிக் சோடா ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மரச்செக்கு எண்ணெய் இயற்கையாக கிடைப்பதுடன் அதன் நிறமும் மனமும் மாறுவதில்லை.
  • சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யின் அடர்த்தி குறைவு. இதனால் ஒரு மாதத்திற்கு நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யின் அளவு இயல்பாகவே அதிகரிக்கும். ஆனால் மரச்செக்கு எண்ணெயின் அடர்த்தி அதிகம் என்பதால் குறைவான அளவு எண்ணெய் பயன்படுத்தினாலே போதுமானது.
விலையை பொறுத்தவரை, மரச்செக்கு எண்ணெய்யின் விலை சற்று அதிகம் தான். ஆனால் உடல்நலத்தை மனதில் வைத்து சிந்தித்துப் பார்த்தால், உடல் ஆரோக்கியம் தான் முக்கியம். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவத்திற்கு செலவு செய்வதைக்காட்டிலும் இந்த விலை ஒன்றும் அதிகம் இல்லை என்பதுதான் எனது கருத்து.

சிந்தித்து செயல்படுவோம்..! உடல் ஆரோக்கியம் காப்போம்..!

நன்றி..!


No comments:

Post a Comment